ஜார்கண்டில் கண்ணி வெடியில் சிக்கி 6 வீரர்கள் பலி!

  Newstm Desk   | Last Modified : 27 Jun, 2018 05:30 pm

six-jawans-killed-in-jharkhand-landmine-blast

ஜார்கண்டில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் வைத்த கண்ணி வெடியில் சிக்கி இந்திய வீரர்கள் 6 பேர் வீரமரணம் அடைந்தனர். 

ஜார்கண்ட் மாநிலத்தில் கர்வா(Garhwa) என்ற பகுதியில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும். இங்கு இந்திய பாதுகாப்புப்படையும் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளது. இதுதவிர ஜார்கண்ட் மாநில சார்பில் ஜாகுவார் என்ற பாதுகாப்புப்படை அமைக்கப்பட்டுள்ளது. கர்வா மாவட்டத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நுழையலாம் என்று வந்த தகவலையடுத்து, ஜாகுவார் போலீசார் கர்வா மாவட்டம் சின்ஜோ பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

அந்த சமயத்தில் வழியில் நிலத்தின் அடியில் வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடி வெடித்தது. இதில் சிக்கிய 6 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், பல வீரர்கள் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close