ரசாயன ஆயுத பயன்பாட்டை இந்தியா திட்டவட்டமாக எதிர்க்கும்!

  Newstm Desk   | Last Modified : 27 Jun, 2018 10:57 pm
chemical-weapons-use-must-be-prosecuted-without-discrimination-india

யாராக இருந்தாலும் உலகின் எந்த பகுதியாக இருந்தாலும், ரசாயன ஆயுதங்களின் பயன்பாட்டை இந்தியா எதிர்க்கும் என ஐக்கிய நாடுகள் சபையில் இந்திய தூதர் தெரிவித்தார்.

ஐநாவின் ரசாயன ஆயுத தடை உடன்படிக்கை குறித்து இன்று நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதில் பேசிய இந்திய தூதர் வேணு ராஜாமணி, ரசாயன ஆயுதங்களின் அழிவுத்  தன்மையை கருத்தில் கொண்டு அதை பாகுபாடின்றி தடை செய்யும் ஒப்பந்தத்திற்கு இந்தியா முழு ஆதரவு அளிப்பதாக கூறினார். "ரசாயன ஆயுதங்களின் பயன்பாடு, மனிதத் தன்மைக்கு எதிரானது. சர்வதேச சட்டத்திற்கும், தடை ஒப்பந்தத்திற்கு எதிரானது" என்றார்.

ரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவோர் யாராக இருந்தாலும், எந்த தயக்கமும் இல்லாமல் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அனைத்து ரசாயன தடை ஒப்பந்த நாடுகள் அனைத்தும் இதுகுறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தெரிவித்தார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close