யுஜிசிக்கு பதிலாக இந்திய உயர்கல்வி ஆணையம்: பிரகாஷ் ஜவடேகர்

  Newstm Desk   | Last Modified : 28 Jun, 2018 09:06 am

center-proposes-to-replace-ugc-with-higher-education-commission

பல்கலைக் கழக மானிய குழுவுக்கு(UGC) பதிலாக,  இந்திய உயர்கல்வி ஆணையம் கொண்டு வரப்படுவதாக மத்திய மனிதவள மேம்பாட்டு  துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.  

பல்கலைக் கழகங்களை மேம்படுத்தவும், ஒருங்கிணைக்கவும், ‘பல்கலைக் கழக மானியக்  குழு’ (யுஜிசி) உருவாக்கப்பட்டது. பல்கலைக் கழகங்களை ஒழுங்குமுறை செய்வது, அவற்றுக்கு தேவையான நிதியை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு  பணிகளை இந்த மானியக் குழு மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில், இந்த குழுவுக்கு மாற்றாக, ‘இந்திய உயர்கல்வி ஆணையம்’ அமைக்கப்பட உள்ளதாக மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர்  பிரகாஷ் ஜவடேகர் நேற்று தெரிவித்தார்.

இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தற்போதுள்ள பல்கலைக் கழக  மானியக் குழுவுக்கு பதிலாக இந்திய உயர்கல்வி ஆணையம் கொண்டு வரப்படும். இதற்காக, பல்கலைக் கழக மானியக் குழு சட்டம் -1951  கலைக்கப்பட்டு, உயர்கல்வி ஆணையம் அமைப்பதற்கான வரைவு சட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த  வரைவு சட்டத்தை பற்றிய கருத்துகளை கல்வியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் அடுத்த மாதம் 7ம் தேதி மாலை 5 மணிக்குள் reformofugc@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்"  என கூறியுள்ளார்.  

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close