எண்ணெய்க்காக ஈரானை எதிர்ப்பார்க்க வேண்டாம்: மோடியிடம்: நிக்கி ஹேலி வலியுறுத்தல்

  Padmapriya   | Last Modified : 28 Jun, 2018 10:40 pm

nikki-haley-meets-pm-modi

பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த அமெரிக்காவுக்கான ஐ.நா. தூதர் நிக்கி ஹேலி, கச்சா எண்ணெய் தேவைக்காக ஈரானை எதிர்ப்பார்க்க வேண்டாம் என்று  வலியுறுத்தியுள்ளார்.  

இந்தியா - அமெரிக்கா இரு தரப்பு உறவை மேம்படுத்தும் நோக்கத்தோடு, அமெரிக்காவுக்கான ஐ.நா. தூதர் நிக்கி ஹேலி 3 நாள் அரசு முறை பயணமாக புதன்கிழமை இந்தியா வந்தார். பிரதமர் மோடியை சந்தித்து இன்று ஆலோசனை நடத்தினார். 

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்தியா- அமெரிக்கா இடையேயான நல்லுறவை மேம்படுத்தும் நோக்கத்தில் எனது பயணம் அமைந்துள்ளது." என்றார்.  பிரதமர் உடனான சந்திப்பில், அவர் இந்தியா - ஈரான் உறவு குறித்து பரிசீலிக்க வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. முன்னதாக, நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரானிடம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா உள்ளிட்ட நாடுகள் வரும் டிசம்பர் மாதத்துக்குள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று மிரட்டல் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹேலி இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டருடன் இணைந்து டெல்லியில் உள்ள முகலாய பேரரசர் ஹுமாயூனின் சமாதி மற்றும் வரலாற்று சிறப்புமிக்க இடங்களை சுற்றி பார்த்தார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

இந்தியா- அமெரிக்கா  இடையேயான நட்புறவு, வர்த்தகம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக பிரதமர் அலுவலக தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close