ராஜஸ்தான் அரசு ஊழியர்கள் ஜீன்ஸ், டி-ஷர்ட் அணிய தடை

  Newstm News Desk   | Last Modified : 28 Jun, 2018 12:38 pm

rajasthan-labour-dept-says-no-to-jeans-at-work

ராஜஸ்தானில் அரசு ஊழியர்கள் அலுவலகத்துக்கு ஜீன்ஸ், டீ-ஷர்ட் அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. 

ராஜஸ்தான் மாநில தொழிலாளர் ஆணையர் கிர்ராஜ் சிங் குஷ்வாகா, அரசு ஊழியர்களுக்கான உடை கட்டுப்பாடு குறித்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், ‘சில அதிகாரிகள், ஊழியர்கள் பணிக்கு வரும் போது ஜீன்ஸ், டி-ஷர்ட் அணிந்து வருகின்றனர். சிலர் அலுவலகத்தின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் உடை அணிந்து வருகின்றனர். எனவே, அனைத்து அதிகாரிகளும், ஊழியர்களும் துறையின் கண்ணியத்தை காப்பாற்ற வேண்டும். அலுவலகத்துக்கு வரும்போது பேண்ட், சட்டை போன்ற கண்ணியமான உடைகளை அணிந்து வரவேண்டும்’ என கூறப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக ராஜஸ்தான் அனைத்து ஊழியர்கள் கூட்டமைப்பு தலைவர் கஜேந்திர சிங் கூறுகையில், ‘‘தொழிலாளர் ஆணையத்தின் இந்த அறிக்கையை கடுமையாக எதிர்க்கிறேன். இதை அவர் திரும்ப பெற வேண்டும். ஜீன்ஸ், டி-ஷர்ட்டை கண்ணியமற்ற, அசிங்கமான ஆடை என்று எப்படி கூற முடியும்?'  என்றார். மேலும் பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close