பிரணாப் முகர்ஜியின் பங்கேற்புக்கு பிறகு ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் சேர்க்கை அதிகரிப்பு

  Newstm Desk   | Last Modified : 29 Jun, 2018 05:30 am
application-to-rss-increases-after-pranab-s-nagpur-speech

நாக்பூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் விழாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்துகொண்டதைத் தொடர்ந்து அந்த அமைப்பில் புதிதாக இணைவோரின் எண்ணிக்கை 5 மடங்காக அதிகரித்துள்ளது.

கடந்த ஜுன் 7ம் தேதி நாக்பூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் விழாவில் முன்னாள் குடியரசுத் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான பிரணாப் முகர்ஜி கடும் விமர்சனங்களையும் மீறி கலந்துகொண்டு உரையாற்றினார்.

இந்த நிகழ்விற்கு பின்னர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இணைவோர்களின் எண்ணிக்கை 5 மடங்காக அதிகரித்துள்ளதாக அதன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். பிரணாப் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் முன்னர், ஜூன் 1 முதல் ஜூன் 6 வரை தினந்தோறும் சுமார் 378 பேர் அந்த அமைப்பில் இணைவதற்காக விண்ணப்பித்துள்ளர். பிரணாப் கலந்துகொண்ட நிகழ்ச்சிக்கு அடுத்த நாள் முதல் நாளொன்றுக்கு 1200 முதல் 1700 ஆக அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பிரணாப் அந்த அமைப்பின் கூட்டத்துக்கு கலந்து கொண்டதால் வந்த மாற்றம் இல்லை என்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினை ஏற்றுக்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், தங்கள் அமைப்பு பெரும்பான்மையானோர் மத்தியில் எடுத்துச் செல்லும் செயல்பாடுகளே அதற்குக் காரணம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close