மும்பையில் விமான விபத்து: 2 விமானிகள் உள்பட 5 பேர் பலி!

  Newstm Desk   | Last Modified : 28 Jun, 2018 04:45 pm

small-plane-crashes-into-mumbai-construction-site-5-dead

மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் சிறிய ரக பயிற்சி விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதில் 5 பேர் உயிரிழந்தனர். 

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை ஜுஹு விமான தளத்தில் இருந்து புறப்பட்ட சிறிய ரக விமானம், மும்பை காட்கோபர் பகுதியில் விழுந்து நொறுங்கியது. அந்த இடத்தில் கட்டிடப்பணிகள் நடந்துகொண்டிருந்தன. கீழே விழுந்த வேகத்தில், விமானம் பற்றி எரிய ஆரம்பித்தது. விமான விபத்து குறித்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்புப்படை மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தற்போது வெளியான தகவலின்படி, இந்த விபத்தில் 2 விமானிகள் மற்றும் 2 பொறியாளர்கள், மற்றும் கட்டிட பணியில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் என 5 பேர் சம்பவ  இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து சிவில் விமான போக்குவரத்துத் துறையும், மும்பை காவல்துறையும் விசாரணை நடத்தி வருகின்றன. விபத்துக்குள்ளான சிறிய ரக விமானத்தை உத்தர பிரதேச அரசு வைத்திருந்தது. கடந்த 2014ம் ஆண்டுதான், மும்பையைச் சேர்ந்த நிறுவனம் இந்த விமானத்தை வாங்கியுள்ளது. அதை பயிற்சி விமானமாக அது பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close