ரயிலில் பயணித்த 10 பாதுகாப்புப்படை வீரர்களை காணவில்லை!

  Newstm Desk   | Last Modified : 29 Jun, 2018 05:31 am

10-bsf-jawans-going-to-j-k-on-army-special-train-go-missing

மேற்கு வங்கத்தில் இருந்து ஜம்மு காஷ்மீருக்கு சென்ற சிறப்பு ரயிலில் பயணித்த 10 எல்லைப் பாதுகாப்புடை வீரர்களை காணவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. 

மேற்கு வங்கம் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பாதுகாப்புப்படை வீரர்கள் ஜம்மு காஷ்மீரின் சம்பா பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மொத்தமாக  83 பேர் சிறப்பு ரயில் மூலமாக பயணம் செய்தனர். இதில் முகுல்சாராய் பகுதி அருகே ரயில் வந்துகொண்டிருந்த சமயத்தில், வீரர்களின் கணக்கெடுப்பு நடைபெற்றது. இதில் 10 வீரர்கள் காணாமல் போயுள்ளது தெரிய வந்துள்ளது. இவர்கள் பர்தாமன் மற்றும் தன்பாத் ரயில் நிலையங்களுக்கு இடையே காணாமல் போயிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இவர்களாக தப்பித்தார்களா? அல்லது கடத்தப்பட்டுள்ளனரா? என அதிகாரிகள் குழம்பியுள்ளனர். இதையடுத்து ரயில்வே காவல்துறையில் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close