காஷ்மீர் தாக்குதல்: தீவிரவாதி சுட்டுக்கொலை; இரண்டு வீரர்கள் படுகாயம்

  Newstm Desk   | Last Modified : 29 Jun, 2018 11:36 am

2-soldiers-injured-after-army-patrol-attacked-in-jammu-and-kashmir

காஷ்மீரில் இன்று தீவிரவாதிகள் அத்து மீறி நடத்திய தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர். மேலும், மற்றொரு பகுதியில் பாதுகாப்புப்படைக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த தாக்குதலில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டான். 

காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் இடைவிடாது தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இன்று காஷ்மீரில் குப்வாரா மற்றும் ஷோபியான் மாவட்டங்களில் தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது. 

குப்வாரா மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து பாதுகாப்புப்படையினர் அப்பகுதிக்கு சென்று தீவிரவாதிகளை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். 

அதே நேரத்தில் ஷோபியான் மாவட்டத்தில் ஊடுருவிய தீவிரவாதிகள், போலீசார் மீது கையெறி குண்டுகளை வீசினர். பதிலுக்கு வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் இரண்டு ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர்.  இதையடுத்து காஷ்மீர் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close