மக்களவை தேர்தல் டிசம்பர், ஜனவரியிலேயே நடக்கும் : தேவகவுடா

  Newstm Desk   | Last Modified : 29 Jun, 2018 08:46 pm
parl-election-maybe-on-december-or-january-says-deve-gowda

மக்களவை தேர்தல் டிசம்பர் அல்லது ஜனவரியிலேயே நடந்தப்படும் என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்துள்ளார். 

முன்னாள் பிரதமரும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலைவருமான எச்.டி.தேவகவுடா டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, "மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே சமயத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கருத்தை பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வரும் டிசம்பர் மாதம் மக்களவைக்கும், மாநில சட்டபேரவைகளுக்கும் தேர்தல் நடத்த பிரதமர் முடிவு செய்வார் என்று நினைக்கிறேன். 

வரும் நவம்பர் மாதம் குளிர்கால கூட்டத்தொடர் நடக்கிறது. இதுவே தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கடைசி கூட்டத்தொடராக இருக்கவும் வாய்ப்புள்ளது. எனது அரசியல் அனுபவத்தை வைத்து பார்க்கும்போது வரும் டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் மக்களவை தேர்தல் நடக்கும் என்றே நினைக்கிறேன். 

மேலும் கர்நாடகாவில் குமாரசாமி முதல்வராக பதியேற்ற போது பா.ஜ.க எதிர்ப்பு கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்தது. ஆனால் அவர்கள் அனைவரும் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவார்கள் என்றில்லை" என்றார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close