லாலுவுக்கு ஆகஸ்ட் 17 வரை ஜாமீன் நீட்டிப்பு!

  Newstm Desk   | Last Modified : 29 Jun, 2018 01:41 pm

lalu-prasad-yadav-s-provisional-bail-extended-till-17-august-by-ranchi-high-court

மாட்டுத்தீவன ஊழல் வழக்குகளில் சிக்கி, சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் ஜாமீன்  ஆகஸ்ட் 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் பீகார் முதல்வராக இருந்த சமயத்தில் கால்நடை தீவனம் வாங்கியதாக அரசின் கருவூலத்தில் மோசடி செய்துள்ளார். இது தொடர்பாக அவர் மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, நான்கு வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டது.  அதன்படி முதல் நான்கு வழக்குகளிலும் சேர்த்து 27.5 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுள்ளார். ஜார்கண்ட் பிர்சா முண்டா சிறையில் அடைக்கப்பட்ட அவர் உடல்நலக்குறைவு காரணமாக ராஞ்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இதையடுத்து மே 12ம் தேதி தனது மகன் தேஜ் பிரதாப் யாதவ்- வின்  திருமணத்தில் கலந்துகொள்ள அவருக்கு  ஜார்கண்ட் நீதிமன்றம்  5 நாட்கள் பரோல் வழங்கியது. அடுத்த விசாரணையில், மருத்துவ சிகிச்சை பெறும் பொருட்டு அவருக்கு ஜூன் 27 வரை ஜாமீன் வழங்கப்பட்டது. அடுத்ததாக ஜூலை 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தற்போதும் தொடர்ந்து லாலு, சிகிச்சை பெற்று வருவதால் ஆகஸ்ட் 27ம் தேதி வரை ஜாமீன் நீடிக்கப்பட்டுள்ளதாக ராஞ்சி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Advertisement:
[X] Close