காகம், குரங்கு, நரிக்கு வாக்களித்தாதீர்கள் புலிக்கு வாக்களியுங்கள்- அனந்த்குமார் ஹெக்டே

  ஐஸ்வர்யா   | Last Modified : 30 Jun, 2018 06:03 am
anantkumar-hegde-likens-opposition-to-crows-monkeys-and-foxes-asks-people-to-elect-tiger-in-2019

2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்காக ஒருபக்கம் காகங்கள், குரங்குகள், நரிகள் ஒன்றிணைந்துள்ளன, மறுபக்கம் நம்மிடம் புலி இருக்கிறது. புலியை தேர்வு செய்து வாக்களியுங்கள் என மத்திய அமைச்சர் அனந்த்குமார் ஹெக்டே பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடகாவில் நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அனந்த்குமார் ஹெக்டே, காக்கா, குருவி, குரங்கு, நரி, கழுதை ஆகியவை நாடாளுமன்ற தேர்தலுக்காக ஒன்றிணைந்துள்ளன என எதிர்க்கட்சிகளின் கூட்டணி குறித்து விமர்சித்துள்ளார். இது சர்சையை ஏற்படுத்தி உள்ளது. அமைச்சரின் இந்த சர்ச்சை பேச்சிற்கு காங்கிரஸ் தலைவர்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். 

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிதான் வெற்றி பெறும் எனக்கூறிய அவர், நமக்கு எதிராக செயல்படும் காக்கா, குருவி, குரங்கு, நரி போன்றவற்றை தோற்கடித்துவிட்டு புலியான பாரதிய ஜனதா தான் வெற்றிப்பெறும் எனக்கூறினார். மேலும் பாரதிய ஜனதாவிற்குதான் தாங்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அனந்த்குமாரின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் அமைச்சர் டி.கே.சிவகுமார், குரங்கு கடவுளாக பார்க்கப்படுகிறது. மேலும் குரங்கில் இருந்து தான் மனிதன் தோன்றியதாக கூறப்படுவதுண்டு. ஆனால் அமைச்சரே இப்படி பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறினார். மேலும் காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்பமொய்லி, புலி விரைவில் காட்டுக்கு சென்று விடும். ஆனால் காகம், குருவி, குரங்கு, நரி, கழுதை ஆகியவை மனிதர்கள் வாழும் இடத்திலும் வாழும் என கண்டனக்குரலை பதிவு செய்துள்ளார் 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close