காஷ்மீர் வெள்ளம்; அமர்நாத் யாத்திரை நிறுத்தம்

  Newstm News Desk   | Last Modified : 29 Jun, 2018 09:30 pm

amarnath-yatra-suspended-after-flood-in-kashmir

கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால், காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

ஜம்மு காஷ்மீரின் அநேக பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருவதனால், அங்குள்ள, ஆறுகள், குளங்கள் நிறைந்து வெள்ளப் பெருக்கெடுத்துள்ளது. இதனால், முக்கியமாக ஜேலம் ஆற்றில் தண்ணீர் ஆபத்தான நிலையில் உள்ளதாம். அதனால், அந்த பகுதியில் உள்ள மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அமர்நாத் யாத்திரை செல்ல ஆயிரக்கணக்கான பயணிகள் காஷ்மீரில் குவிந்துள்ள நிலையில், யாத்திரை தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. பட்டால் மற்றும் பஹல்காம் பகுதிகளில் உள்ள முகாம்களில் அமர்நாத் பயணிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அனைத்து பயணிகளும் அங்கு பாதுகாப்பாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close