2 நாட்களில் 10 லட்சம் பேர் டவுன்லோடு செய்த பாஸ்போர்ட் ஆப்!

  Newstm News Desk   | Last Modified : 30 Jun, 2018 06:54 am

passport-app-gets-1-million-downloads-in-2-days

மத்திய அரசு துவக்கி வைத்த மொபைல் பாஸ்போர்ட் ஆப் சேவையை, இரண்டே நாட்களில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். 

பொதுமக்கள் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் முறையை எளிதுபடுத்த, புதிய மொபைல் ஆப் ஒன்றை மத்திய வெளியுறவுத்துறை உருவாக்கியது. இந்த ஆப், கடந்த புதன்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. பாஸ்போர்ட் ஈ சேவா என அழைக்கப்படும் இந்த ஆப் ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களிலும் பயன்படுத்தலாம். முக்கியமாக இந்த ஆப் மூலம், வெளியூர்களில் வசிப்பவர்கள் அங்குள்ள அலுவலகங்களிலேயே பாஸ்போர்ட் விண்ணப்பிக்க முடியும். 

தற்போது இந்த ஆப் சேவை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. "வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிமுகப்படுத்திய பாஸ்போர்ட் சேவா மொபைல் ஆப்பை ஏற்கனவே 10 லட்சம் பேர் டவுன்லோட் செய்துள்ளனர்" என அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ட்விட்டரில் தெரிவித்தார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close