திருநங்கைகளுக்கென கூட்டுறவு வங்கியை உருவாக்கி கேரள அரசு மாபெரும் சாதனை!

  Newstm Desk   | Last Modified : 30 Jun, 2018 10:27 am
kerala-sets-an-example-yet-again-forms-first-ever-cooperative-society-for-transgenders

இந்தியாவிலேயே முதல்முறையாக திருநங்கைகளுக்கென கூட்டுறவு வங்கியை உருவாக்கி அம்மாநில அரசு சாதனை படைத்துள்ளது. 

கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெறுகிறது. அவர் அம்மாநிலத்தில் வரவேற்கத்தக்க பல திட்டங்களை கொண்டு வந்துள்ளார். பெண்களுக்கு வேலைவாய்ப்பு,ரோபோ உதவியுடன் கழிவுகளை அகற்றுதல் உள்ளிட்டவை இந்திய அளவிலே பெரும் வரவேற்பை பெற்றன. இதையடுத்து திருநங்கைகளுக்கு என ஒரு கூட்டுறவு வங்கி உருவாக்கப்படும் என கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது. 

அதன்படி, ‘டிரான்ஸ்ஜென்டர் கோ-ஆப்ரேட்டிவ் சொசைட்டி’ என்ற பெயரில் இந்த கூட்டுறவு வங்கி தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவிலே முதல்முறையாக திருநங்கைகளுக்கென கூட்டுறவு வங்கியை ஏற்படுத்திய முதல் மாநிலம் என்ற என்ற பெருமையை கேரள மாநிலம் பெற்றுள்ளது. 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டிரான்ஸ்ஜென்டர் கோ-ஆப்ரேட்டிவ் சொசைட்டியின் தலைவர் சியாமா பிரபா, "இந்த கூட்டுறவு வங்கிகள் மூலமாக திருநங்கைகள் சொந்தமாக தொழில் தொடங்க வங்கி  உதவி செய்யும். இதன்மூலம் திருநங்கைகளின் வாழ்க்கைத்தரம் மேம்படும். மேலும், கூட்டுறவு வங்கி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில், சமூகத்தில் தனிமைப்படுத்தப்படும் திருநங்கைகளுக்கு வசதி தங்கும் ஏற்படுத்தி கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன" என தெரிவித்தார்.

முன்னதாக கொச்சி மெட்ரோ ரயில் நிலையத்தில் திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தது இந்திய அளவில் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close