கர்நாடகா, கேரளாவில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

  Newstm Desk   | Last Modified : 30 Jun, 2018 03:09 pm

heavy-rainfall-is-possible-in-karnataka-and-kerala

கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் இன்று  கனமழைக்கு வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் இந்தியா முழுவதுமே பரவலாக மழை பெய்து வருகிறது. இன்றைய வானிலை நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள தகவலின்படி, 'முந்தைய ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்தாண்டு பருவமழை சிறப்பாக உள்ளது. ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் கடந்த ஆண்டை ஒப்பிட்டால் 96 முதல் 104 சதவீத மழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று கர்நாடகா மற்றும் கேரளா கடலோரப்பகுதியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது. எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், அசாம், மேகாலயா, உத்தரகாண்ட் மாநிலத்தின் சில பகுதிகளிலும் இன்று  கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

கர்நாடகாவில் அதிக மழை பெய்து வருவதால் தமிழகத்திற்கு அதிக நீர் திறந்துவிடப்படும் எனஎதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கர்நாடகாவின் கபினி அணையில் இருந்து 25,000 கனஅடி அளவுக்கு நீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close