காஷ்மீர் எல்லைப்பாதுகாப்பில் இறங்கும் பெண் பாதுகாப்புப்படையினர்!

  Newstm Desk   | Last Modified : 30 Jun, 2018 02:21 pm
now-woman-commandos-to-fight-against-stone-pelters-in-jammu-and-kashmir

காஷ்மீர் எல்லைப் பாதுகாப்பு பணியில் முதல் முறையாக பெண் பாதுகாப்புப்படையினர் இறங்க உள்ளனர். 

இந்திய வட எல்லையான காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தொடர்ந்து அத்து மீறி தாக்குதலை நடத்தி வருகின்றனர். இதற்கு இந்திய ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. காஷ்மீரின் பல பகுதிகளில் இளைஞர்கள், பெண்கள் என கற்களை வீசி தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர். பெண்களின் தாக்குதலை தடுக்க பெண் கமாண்டோக்களை நியமிக்க இந்திய பாதுகாப்புப்படை முடிவு செய்தது.அதன்படி, பெண் பாதுகாப்புப்படையினரை தேர்வு செய்யும் பணியில் ராணுவம் இறங்கியுள்ளது. சில முக்கிய பயிற்சிகள் கொடுக்கப்பட்டு பெண் பாதுகாப்புப்படையினர் தேர்வு செய்யப்பட்டு இந்த பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். 

 

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close