காவிரி விவகாரம்: கர்நாடகா மீண்டும் உச்சநீதிமன்றம் செல்கிறது

  ஐஸ்வர்யா   | Last Modified : 30 Jun, 2018 07:15 pm

cauvery-issue-karnataka-govt-goes-for-supremecourt

காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் வரும் ஜூலை 2-ம் தேதி டெல்லியில் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தக் கூட்டத்தில், தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களின் உறுப்பினர்களும், மத்திய அரசின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்நிலையில் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா, கர்நாடக விவசாயிகள் சங்கத் தலைவர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள், அமைச்சர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதற்கு எதிராக கர்நாடக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை ஆணைய முதல் கூட்டத்தில் காவிரி வழக்கு தீர்ப்பிலுள்ள ‘ஸ்கீம்’ பற்றி விளக்கம் கேட்டு மேல்முறையீடு செய்யவும் கர்நாடகா தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக அம்மாநில நீர்பாசனத்துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close