13 முறை வன்புணர்வு: கேரள பிஷப் மீது கன்னியாஸ்திரி பரபரப்பு புகார் 

  Padmapriya   | Last Modified : 30 Jun, 2018 11:00 pm
kerala-nun-alleges-bishop-raped-her-13-times-in-two-years

கேரளாவில், சிரோ மலபார் கத்தோலிக்க ஆயர் மீது கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் வன்புணர்வு புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் உள்ள கோட்டயம் மாவட்டம் குருவிலாங்காடு பகுதியில், சிரோ மலபார் கத்தோலிக்க தேவாலயத்துக்கு சொந்தமான விடுதியின் கன்னியாஸ்திரி, வட இந்தியாவில் தற்போது பணியாற்றி வரும் சபை ஆயர் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்ததாக, கோட்டயம் மாவட்ட காவல்துறை அதிகாரியிடம்  புகார் அளித்துள்ளார். 

அந்த புகாரில் கடந்த, 2014ஆம் ஆண்டு மே மாதம் குருவிலாங்காடு விடுதியில் வைத்து பிஷப் பிரான்கோ முல்லக்கல் என்பவர் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாகவும். அதன் பிறகும் பல முறை அவர் அத்தகைய செயலில் நடந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.  இரண்டு வருடத்தில் 13 முறை தன்னை வன்புணர்வு செய்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து ஏற்கெனவே திருச்சபையின் உயர் பிஷப்களிடம் புகார் அளித்ததாக கன்னியாஸ்திரி தெரிவித்தார். ஆனால் அவர்கள் அந்த பிஷப் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் தற்போது போலீசில் புகார் அளித்திருப்பதாக" தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, சம்பந்தப்பட்ட ஆயரும் கன்னியாஸ்திரிக்கு எதிராக போலீசில் புகார் செய்துள்ளார். அந்த புகாரில், கன்னியாஸ்தரியை வேறு இடத்திற்கு பணி மாறுதல் செய்யும் உத்தரவை பிறப்பித்தேன். இதைத் தொடர்ந்து தன்மீது அவதூறாக புகார் செய்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த இரு புகார்கள் மீதும் உரிய விசாரணை மேற்கொள்ளுமாறு காவலத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். கன்னியாஸ்திரியின் குற்றச்சாட்டுக்களுக்கு இதுவரை எந்தவித எதிர்வினையும் தேவாலய தரப்பிலிருந்து வரவில்லை என்றும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. கேரளாவில் மற்றொரு பிரிவு கிறிஸ்தவ சபையைச் சேர்ந்த ஐந்து பாதிரியார்கள் மீது பாலியல் பலாத்கார புகார் வந்ததும், அது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close