நாளை நடக்கும் முதல் காவிரி மேலாண்மை வாரிய கூட்டம்!

  திஷா   | Last Modified : 01 Jul, 2018 01:23 pm
meeting-for-water-cauvery-management-board

பல போராட்டங்களுக்குப் பிறகு காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் நாளை டெல்லியில் நடைபெறுகிறது. 

காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது, அணைகளை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. இதன் இடைக்கால தலைவராக மத்திய அரசின் நீர் ஆணைய தலைவரான மசூத் உசேன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தின் சார்பில் காவிரி ஆணைய உறுப்பினராக பொதுப் பணித்துறை செயலாளர் பிரபாகர் நியமிக்கப்பட்டார். இதுபோல காவிரிக்கு தொடர்புடைய கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில அரசுகளும் தங்கள் மாநில பிரதிநிதிகளை நியமித்துள்ளனர்.

காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டி தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தீவிர போராட்டங்கள் நடந்தன. மிக நீண்ட சட்ட போராட்டத்துக்குப் பிறகு காவிரியில் நம்முடைய உரிமை குறைக்கப்பட்டது. இருப்பினும், குறைக்கப்பட்ட அளவு தண்ணீராவது தாருங்கள் என்று கேட்கும் நிலை ஏற்பட்டது. பல போராட்டங்களைக் கடந்து ஒருவழியாக காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப் பட்டது. அதன் முதல் கூட்டம் நாளை டெல்லியில் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் தலைவர் உள்ளிட்ட 9 பேரில் குறைந்தபட்சம் 6 பேராவது கலந்து கொள்ள வேண்டும். 

6-க்கும் குறைவான நபர்கள் மட்டும் கலந்துக் கொண்டால், ஒரு சில நாள் இடைவெளிவிட்டு மீண்டும் இந்தக் கூட்டம் நடத்தப்படும். ஆனால் முதல் கூட்டம் என்பதால் நாளை நடைபெறும் கூட்டத்தில் அனைவரும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், காவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுக உள்ளது. இதனால், கர்நாடக பிரதிநிதிகள் பங்கேற்பார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close