ராமாயணத்தை உருதில் மொழிபெயர்த்த இஸ்லாமிய பெண்!

  ஐஸ்வர்யா   | Last Modified : 02 Jul, 2018 01:39 am

muslim-woman-translates-ramayana-in-urdu-to-promote-communal-harmony

உத்தர பிரதேச மாநிலம், கான்பூரைச் சேர்ந்த இஸ்லாமிய பெண் ஒருவர் ராமாயணத்தை உருது மொழியில் மொழி பெயர்த்துள்ளார்.

கான்பூரில் வசிக்கும் பெண் மருத்துவரான மாஹி தலத் சித்திக் என்பவர் ராமாயணத்தை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உருது மொழியில் எழுதி வெளியிட்டுள்ளார். 

இதுகுறித்து மாஹி தலத் கூறுகையில், அனைத்து மத நூல்களைப் போன்று ராமாயணத்திலும் அமைதி மற்றும் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் கருத்துகள் இருப்பதால் உருது மொழியில் மொழி பெயர்த்துள்ளேன். 2 ஆண்டுகளுக்கு முன் கான்பூரில் வசிக்கும் இலக்கிய ஆர்வலர் பத்ரி நாராயண் திவாரி ஹிந்தி மொழியில் எழுதப்பட்ட ராமாயண புத்தகத்தை கொடுத்து உருது மொழியில் எழுதும்படி கூறினார். அப்போது தொடங்கிய என் மொழிப்பெயர்ப்பு பயணம் தற்போதுதான் முடிவடைந்தது. ஹிந்துக்கள் மட்டுமின்றி, இஸ்லாமிய சமுதாயத்தினரும் ராமாயணத்தில் உள்ள நல்ல கருத்துகளை தெரிந்து கொள்வதற்காக உருது மொழியில் எழுதியிருக்கிறேன். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close