மானிய கேஸ் சிலிண்டர் விலை ரூ.2.71 உயர்வு

  Newstm News Desk   | Last Modified : 01 Jul, 2018 04:58 pm

subsidised-gas-cylinder-price-hiked-by-rs-2-71

மானிய சமையல் கேஸ் விலை ரூ.2.71 உயர்த்தப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் சமையல் கேஸ் சிலிண்டரின் விலை ரூ.2.71 என உயர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் சமையல் கேஸ் விலையை மாற்றி எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பை வெளியிடுவார்கள். இந்த முறை, சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயர்வு, டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றால், விலை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு ஆண்டுக்கு 12 கேஸ் சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. இந்த புதிய விலை உயர்வை தொடர்ந்து, ஒரு 14.2 லிட்டர் சிலிண்டரின் விலை, சென்னையில் ரூ.484 .67 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close