• இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜீத் வடேகர் மரணம்
  • வாஜ்பாய் கவலைக்கிடம்... தலைவர்கள் எய்ம்ஸ் வருகை
  • பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது
  • நிலக்கரி இறக்குமதி முறைகெடு தொடர்பாக சி.பி.ஐ விசாரணை - ஸ்டாலின் வலியுறுத்தல்
  • மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.30 லட்சம் கனஅடியாக உயர்வு

உத்தரகாண்ட்: பள்ளத்தாக்கில் பேருந்து விழுந்து 48 பேர் பலி

  Newstm News Desk   | Last Modified : 01 Jul, 2018 06:00 pm

uttarakhand-48-dead-as-bus-falls-into-a-gorge

உத்தரகாண்ட் மாநிலத்தின் பவுரி பகுதியில் ஒரு தனியார் பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 48 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

உத்தரகாண்டின் பவுரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு தனியார் பேருந்து ராம்நகருக்கு சென்று கொண்டிருந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சுமார் 200 மீட்டர் ஆழம் கொண்ட பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. பேருந்தில் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றதால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. காவல்துறை அதிகாரிகள் அந்த பகுதிக்கு உடனடியாக விரைந்தனர். 

சம்பவ இடத்திலேயே 45 பேர் உயிரிழந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 3 பேர் பின்னர் இறந்தனர். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 இந்த சம்பவத்தின் செய்தி கேட்டு, தான் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இறந்தவர்கள் குடும்பங்களுக்கு 2 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரகாண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisement:
[X] Close