மக்களவை உறுப்பினர்கள் இனி 5 கேள்விகள் மட்டுமே கேட்க முடியும்

  ஐஸ்வர்யா   | Last Modified : 01 Jul, 2018 09:46 pm

lok-sabha-members-can-ask-max-5-questions

மக்களவை உறுப்பினர்கள் வரும் கூட்டத்தொடரில் கேட்கும் கேள்விகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்பது, கேள்விகள் எழுப்புவது, வருகை பதிவேடு உள்ளிட்டவை கருத்தில் கொள்ளப்படும். இந்நிலையில் மக்களவை உறுப்பினர்கள் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஒரு நாளைக்கு 10 கேள்விகள் கேட்கலாம் என இதுநாள்வரை இருந்த விதி வரும் கூட்டத்தொடரில் இருந்து மாறுபடுகிறது. வரும் கூட்டத்தொடரில் இருந்து ஒரு நாளைக்கு இனி 5 கேள்விகள் மட்டுமே கேட்க முடியும். 

ஐந்து கேள்விகளுக்கு மேல் கேட்கவேண்டும் என மக்களவை உறுப்பினர் சபாநாயகரிடம் நோட்டீஸ் கொடுக்கும்போது அடுத்து வரும் நாட்களில் அந்த கேள்விகள் எடுத்துக்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் 10 கேள்விகளுக்கு மேல் நோட்டீஸ் அளிக்க முடியாது. இந்த விதிமாற்றத்திற்கு மக்களவை பொதுச் செயலாளர் சினேகலதா ஸ்ரீவத்சவா ஒப்புதல் அளித்துள்ளார். ஜூலை 16ம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இருந்து நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close