பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமிக்கு ஹெச்ஐவி?

  ஐஸ்வர்யா   | Last Modified : 02 Jul, 2018 07:51 am
police-fear-minor-victim-in-mandsaur-rape-is-infected-with-hiv

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 8 வயது சிறுமிக்கு ஹெச்ஐவி தொற்று ஏற்பட்டிருக்குமோ என போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 26ம் தேதி, மத்திய பிரதேச மாநிலம் மாண்ட்சார் நகரின் ஹபீஸ் காலனியில் 8 வயது சிறுமி ஒருவர் அவரது பள்ளியிலிருந்து கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட சிறுமியின் கழுத்தை அறுத்துவிட்டு குற்றவாளிகள் தப்பிச் சென்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இர்பான் என்கிற பையூ மற்றும் ஆசிப் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்துதீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அந்த 8 வயது சிறுமிக்கு ஹெச்ஐவி தொற்று ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. குற்றம்சாட்டப்பட்டுள்ள குற்றவாளிகள் 2 பேருக்கு ஹெச்ஐவி சோதனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். 

இது தொடர்பாக குற்றவாளி இர்பானின் தந்தை கூறுகையில், “ஆசிப் அவனது நண்பன். இர்பானுக்கு நட்பு வட்டாரங்கள் சரியில்லை. என் மகனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. அவன் தவறு செய்து உறுதிப்படுத்தப்பட்டால் அவனுக்கு தூக்கு தண்டனை வழங்குகள். 5 பெண்களுடன் பிறந்து வளர்ந்த இர்பான் ஏன் இப்படி செய்தான் என தெரியவில்லை” கூறியுள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close