காஷ்மீர்: கல் எரிதலை தடுக்க 800 பெண் சிஆர்பிஎஃப் கமேண்டோக்கள்!

  Newstm Desk   | Last Modified : 02 Jul, 2018 09:43 am
800-women-crpf-commandos-to-be-deployed-to-tackle-women-stone-pelters

காஷ்மீரில் அதிகாரிகள் மீது கற்களை எரியும் வன்முறை சம்பவங்களில் ஈடுபாடு பெண்களை தடுக்கவும், கட்டுப்படுத்தவும், பெண் கமேண்டோக்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது சிஆர்பிஎஃப்

ஜம்மு காஷ்மீரில், காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினர் மீது பொதுமக்கள் கற்களை எரியும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதை எதிர்த்து ராணுவம் எடுக்கும் பல்வேறு நடவடிக்கைகள் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. சமீப காலமாக, பெண்களும் இதுபோன்ற கற்களை எரியும் வன்முறை சம்பவங்களில் கலந்துகொள்ளத் துவங்கியுள்ளனர். 

பெண்கள் மீது ராணுவ வீரர்கள் எடுக்கும் நடவடிக்கைகள் மனித உரிமை ஆர்வலர்களின் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கும் நிலையில், இதற்காக பிரத்யேக பெண் கமேண்டோக்களை தேர்வு செய்துள்ளது சிஆர்பிஎஃப். 800 பெண் கமேண்டோக்களுக்கு இதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பணியமர்த்தப்படுவார்கள். 

ஸ்ரீநகரில் உள்ள ஹும்ஹுமா ராணுவ பயிற்சி வளாகத்தில், இந்த பெண் கமேண்டோக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பணியில் ஈடுபடும் போது, இவர்களுக்கு முழு பாதுகாப்பு ஆடைகள், ஹெல்மெட், கண்ணீர் புகை குண்டு, லத்தி உள்ளிட்டவை வழங்கப்படும். 

கற்களை எரியும் சம்பவங்கள் காஷ்மீரில் அதிகரித்து வருகிறது. பொதுவாகவே இளைஞர்கள் இதுபோன்ற சம்பவங்களில் ஒருங்கிணைத்து ஈடுபட்டாலும், சமீப காலமாக இளம் பெண்களும் இதில் கலந்து கொள்வது அதிகரித்து வருகிறது. இதனால், இதுபோன்றவற்றில் ஈடுபடும் பெண்களை கட்டுப்படுத்த, 800 பெண் கமேண்டோக்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது" என சிஆர்பிஎஃப் நடவடிக்கைகள் ஐஜி ஸுல்பிக்கர் ஹசான் தெரிவித்துள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close