மகாராஷ்டிராவில் குழந்தை கடத்தல் கும்பல் எனக்கருதி 5 பேர் கொலை; 23 பேர் கைது

  Newstm Desk   | Last Modified : 02 Jul, 2018 12:32 pm

maharastra-23-people-arrested-in-dhule-lynching-case-5-teams-formed-to-identify-more-accused

மகாராஷ்டிராவில் குழந்தை கடத்தல் கும்பல் எனக் கருதி 5 பேர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவத்தில் 23 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தற்போது குழந்தை கடத்தும் கும்பல் அதிகரித்து வருவதாகவும், அதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொள்ளுமாறு சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது. ஆனால் இந்த விவகாரம் சமீபத்தில் விபரீதமாக கூட முடிந்து விடுகின்றன. தமிழகத்தில் திருவள்ளூர் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் குழந்தை கடத்த வந்ததாக கருதி பொதுமக்கள் ஊருக்கு புதிதாக வரும் நபர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர். இதில் உயிர்பலியும் நடைபெறுகிறது.

இதேபோன்று மகாராஷ்டிராவிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் துலே மாவட்டம் பிம்பால்னர் என்ற பகுதியில் இருந்து 20 கிமீ தொலைவில் ரெயின்பாடா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு 7 பேர் புதிதாக வந்துள்ளனர். இவர்கள் வேலை தேடி வந்ததாக அப்பகுதி மக்களிடம் கூறியுள்ளனர். மேலும், பெரியவர்களிடம் பேச்சுக்கொடுத்த அவர்கள் ஒரு குழந்தையிடம் சிறிது நேரம் பேசியுள்ளனர். இதனால் இவர்கள் குழந்தை கடத்த தான் வந்துள்ளதாக எண்ணி, அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை சரமாரியாக தாக்க ஆரம்பித்தனர்.  இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 பேர் உயிர் தப்பித்தனர். 

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது. தாக்குதல் நடத்தியவர்களில் பெரும்பாலானோர் ஆண்கள் தான். இதுவரை 23 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் மேலும் பலருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. மற்றவர்களை தேடும் பணியில் காவல்துறை இறங்கியுள்ளது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.