ஆப்கானிஸ்தான் தீவிரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம்

  Newstm Desk   | Last Modified : 02 Jul, 2018 04:56 pm

pm-modi-condemn-blast-targeting-sikh-community-in-afghanistan

ஆப்கானிஸ்தானில் சீக்கியர்கள் மற்றும் இந்துக்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். 

ஆப்கானிஸ்தானின் ஜலலாபாத் நகரில் மருத்துவமனை கட்டிடத் திறப்பு விழாவில் நாட்டின் அதிபர் அஷ்ரப் கானி கலந்து கொண்டார். அவர் சென்ற சில மணி நேரங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 20 பேர் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தானில் சீக்கியர்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் சீக்கியர்கள் உள்பட 20 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இது குறித்து ட்விட்டரில் இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, இது ஆப்கானிஸ்தானின் பன்முக கலாச்சாரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும், ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் உள்ள ஜலாலாபாத் நகரில் சீக்கிய மற்றும் இந்து சிறுபான்மை இன மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். போரால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கான் நாட்டிற்கு இந்தியா பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. இந்நாட்டில் வரும் அக்டோபர் மாதத்தில் பொது தேர்தல் நடைபெற உள்ளது. இத் தேர்தலில் குறிப்பிடத்தக்க அளவில் சீக்கிய மற்றும் இந்துக்கள் போட்டியிட உள்ளனர். இந்துக்கள் மற்றும் சீக்கியர்களை அச்சுறுத்தும் வகையில் பயங்கரவாத அமைப்புக்கள் தொடர்ந்து வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. சிறுபான்மையினர் மட்டுமல்ல... பெரும்பான்மையான இஸ்லாமி மக்களையும் கொல்லும் பயங்கரவாத அமைப்புக்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதே ஆப்கானிஸ்தான் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close