தமிழகத்திற்கு ஜூலை மாத காவிரி நீரை வழங்க ஆணையம் உத்தரவு!

  Newstm Desk   | Last Modified : 02 Jul, 2018 03:43 pm
cauvery-management-authority-meeting-cauvery-water-for-july-month-to-be-released-to-tn

தமிழகத்திற்கு ஜூலை மாதம் வழங்க வேண்டிய தண்ணீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் இன்று  உத்தரவிட்டுள்ளது. 

காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் இன்று டெல்லியில் சேவாபவன் அலுவலகத்தில் அதன் தலைவர் மசூத் ஹுசைன் தலைமையில் நடைபெற்றது. இன்று காலை 11 மணிக்குத் தொடங்கிய கூட்டமானது பிற்பகல் 3 மணிக்கு முடிவுற்றது. இதில் தமிழக தரப்பில் பொதுப்பணித்துறை முதன்மைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் கலந்துகொண்டார். தமிழகத்திற்கு வழங்கவேண்டிய நீரை உடனடியாக திறந்துவிட வேண்டும் என தமிழகம் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 

கூட்டத்திற்கு பின்னர், தமிழகத்திற்கு ஜூலை மாதம் வழங்க வேண்டிய தண்ணீரை திறந்துவிட கர்நாடகவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தை முழுமையாக ஏற்காத கர்நாடகாவுக்கு இது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் முதல் கூட்டத்திலேயே காவிரி நீரை திறந்துவிட ஆணையம் உத்தரவிட்டுள்ளதால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


 

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close