காவிரி ஆணைய முதல் கூட்டம் ஒரு வரலாற்று நிகழ்வு: மசூத் ஹுசைன்

  Newstm Desk   | Last Modified : 02 Jul, 2018 04:10 pm

cauvery-management-authority-press-meet-of-masood-hussain

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான முதல் கூட்டம் சுமூகமான முறையில் நடைபெற்றது எனவும் இந்த கூட்டம் ஒரு வரலாற்று நிகழ்வாகவே அனைவராலும் பார்க்கப்படுகிறது எனவும் ஆணையத்தின் தலைவர் மசூத் ஹுசைன் தெரிவித்தார். 

இன்று நடைபெற்ற காவிரி ஆணைய முதல் கூட்டத்தின் முடிவில்,  தமிழகத்திற்கு ஜூலை மாதம் வழங்கவேண்டிய காவிரி நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. கூட்டத்தில் நடத்தப்பட்ட விவாதம் குறித்து  மசூத் ஹுசைன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான முதல் கூட்டம் சுமூகமான முறையில் நடைபெற்றது. இந்த கூட்டம் ஒரு வரலாற்று நிகழ்வாகவே அனைவராலும் பார்க்கப்படுகிறது. பல  ஆண்டுகளாக நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து காவிரி பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைத்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான இன்றைய முதல் கூட்டத்தில் கலந்துகொண்ட நான்கு மாநிலங்களின் நிலைப்பாடு குறித்து கேட்கப்பட்டது. இறுதியில், தமிழகத்திற்கு ஜூலை மாதம் வழங்கவேண்டிய நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. எவ்வளவு நீர் திறந்துவிட வேண்டும் என்பதை நாங்கள் கணக்கிட்டு பின்னர் அறிவிப்போம்.

ஜூன் மாதம் திறந்துவிட்ட நீரை கணக்கில் கொண்டும், தற்போது பிலிகுண்டுலு நீரளவை கணக்கில் கொண்டும் இது முடிவெடுக்கப்படும். கடந்த மாதம் 3 டிஎம்சி நீர் அதிகமாக திறந்துவிட்டுள்ளதாக கர்நாடகா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கடந்த மாதம் வழங்கப்பட்ட உபரி நீரும் இதில் கணக்கில்கொள்ளப்படும்.  காவிரி  மேலாண்மை ஆணையத்தின் முடிவுகளுக்கு, உத்தரவுகளுக்கு அனைத்து மாநிலங்களும் ஒத்துழைப்பு கொடுக்கும் என்று நான் நம்புகிறேன். மேலும், ஆணையத்தின் இறுதி முடிவு. இதனை மாற்ற எந்த மாநிலத்திற்கும் அதிகாரம் இல்லை. ஆணையமும் அனைத்து மாநிலத்திற்கும் பொதுவாகவே செயல்படும்.

காவிரி ஆணையத்தில் அலுவலகம் டெல்லியில் தான் அமைக்கப்படவுள்ளது. இது தொடர்பாக மத்திய நீர்வளத்துறையிடம் பேசியுள்ளோம். ஆணையத்தின் அடுத்த கூட்டம் விரைவில் நடைபெறும். ஜூலை 5ம் தேதி காவிரி ஒழுங்கற்றுக்குழு கூட்டம் நடைபெறும்" என்றார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close