டெல்லியில் 11 பேரின் மர்ம சாவுக்கு மூடநம்பிக்கை காரணமா?- குழப்பதில் போலீஸ்

  Padmapriya   | Last Modified : 03 Jul, 2018 01:45 am

burari-deaths-explained-11-bodies-a-pet-dog-and-a-mysterious-diary-burari-deaths-explained-11-bodies-a-pet-dog-and-a-mysterious-diary

டெல்லி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் மர்ம மரணமடைந்து கிடந்த விவகாரத்தில், மேலும் போலீஸுக்கு குழப்பம் ஏற்படுத்துவதாக பல மர்ம விவகாரங்கள் அடங்கிய டைரி சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. 

டெல்லியில் பூட்டப்பட்ட வீட்டில் இருந்து 11 பேரின் உடல்களை போலீசார் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கைப்பற்றினர். கூட்டு தற்கொலையில் ஈடுபட்டனரா அல்லது கொலை செய்யப்பட்டனரா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சம்பவம் நடந்த இடத்தில் டைரி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் அந்த குடும்பத்துக்கு தொடர்பான பல அதிர்ச்சித் தகவல்கள் அடங்கியுள்ளதாக தெரிகிறது.  இது குறித்து விசாரணையில் ஈடுபட்டுள்ள போலீஸ் தரப்பு கூறும்போது, "தற்கொலை செய்து கொண்டதாக கருதப்படும் லலித், பவனேஷ் குடும்பத்தினர் வித்தியாசமான வழிபாட்டு முறையைப் பின்பற்றி வந்துள்ளனர். அதற்காகவே வீட்டுக்குள் சிறிய கோயிலைக் கட்டிவைத்து வழிபட்டுள்ளனர்.

இவர்களின் வழிபாட்டு முறை மிகவும் புதிராகவும், மூடநம்பிக்கை மிகுந்ததாகவும் இருக்கிறது.  ஆனால் இவர்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் படித்தவர்கள் என்பதால், மூடநம்பிக்கை உள்ளவர்கள் என்று யாரும் நம்பும்படியாக இல்லை. 

ஆனால் வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரியில் இருந்து பல்வேறு விஷயங்கள் தெளிவாகிறது.  இவர்கள் தற்கொலை செய்துகொள்ள சென்ற ஆண்டு முதலே தயாராகி வந்துள்ளனர். சொர்கத்தை அடையும் வழி என்ற ரீதியிலான குறிப்புகள் டைரியில் உள்ளது. இது தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம். 
 
உடல்களில் கண்கள், காதுகள், வாய், கை, கால்கள் அனைத்தும் கட்டப்பட்டு இருந்தன. தற்கொலை செய்யும் முறையும் கூட அந்த டைரியில் எழுதப்பட்டுள்ளது. எங்களின் முதல் கட்டவிசாரணையில் நாராயண் தேவியை முதலில் அவரின் இரு மகன்களும் கொலை செய்துவிட்டு, மனைவிகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துள்ளனர். அதன்பின் குழந்தைகளை தூக்கில் தொங்கவிட்டு, இறுதியாக தாங்களும் தூக்குமாட்டி இறந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கிறோம்.

தற்கொலை செய்துகொண்டதாக நம்பப்படும் தேதிக்கு முன்னாள் இரவு, உணவு ஆர்டர் செய்துள்ளனர். இரவு 11 மணியளவில் சாப்பாடு டெலிவரி ஆகும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.  அதன் பின்னர் அந்த வீட்டிலிருந்து யாரும் வெளியே செல்லவில்லை, யாரும் வரவும் இல்லை. 

வீட்டில் வளர்த்து வந்த நாய் மொட்டைமாடியில் கட்டிவிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று தெரிகிறது. 

அவர்கள் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் சொர்கத்தை அடையும் வழி என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் எழுதப்பட்டுள்ளது. அதில் வியாழக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமைதான் தற்கொலை செய்ய வேண்டும் என்ற குறிப்பும் உள்ளது. 

தற்கொலை செய்யும் போது, விளக்குகள் அனைத்தும் குறைந்த வெளிச்சத்தில் இருக்க வேண்டும். நள்ளிரவு 12 மணியில் இருந்து ஒரு மணிக்குள்தான் தற்கொலை இருக்க வேண்டும். தற்கொலை செய்யும் போது, அனைவரின் கண்களும் கட்டப்பட வேண்டும், பூஜ்ஜியத்தைத் தவிரவேறு எதையும் பார்க்கக் கூடாது.

தற்கொலைக்குப் புடவை அல்லது கயிறு பயன்படுத்தலாம். வீட்டில் இருக்கும் பாட்டியை தரையில் கீழே படுக்கவைத்து தற்கொலை செய்யவைக்கலாம் என்றும் கூட எழுதப்பட்டுள்ளது.

இந்தக் குறிப்புகள் அனைத்தும் கடந்த மாதம் 26ஆம் தேதி எழுதப்பட்டு, ஜூன் 30-ம் தேதி இரவு அனைவரும் கடவுளைச் சந்திக்கச் செல்கிறோம். தற்கொலை செய்யும் போது அனைவரும் நாற்காலியைப் பயன்படுத்த வேண்டும். கைகள், கால்கள், வாய், கண்கள் கட்டப்பட்டு இருந்தால்தான் சொர்கத்தை அடைய முடியும் என அந்த டைரியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் 11 பேரும் தாங்கள் இறந்தபின் தங்களுடைய கண்களைத் தானமாக வழங்கிவிடுங்கள். 22 பேருக்கு பார்வைகிடைக்க நாங்கள் உதவியாக இருப்போம். இது எங்களுடைய விருப்பம் எனவும் தெரிவித்துள்ளனர் " என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தற்கொலை செய்துகொண்டதில் வீட்டில் வயது முதிர்ந்த பெண் நாராயண் தேவி(77) தரையில்படுத்தவாறு இறந்திருந்தார். மற்ற 10 பேரும் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்துள்ளனர். இதில் நாராயண் தேவியின் இரு மகன்கள் பவனேஷ்(50), லலித் பாட்டியா(45), மகள் பிரதிபா(57).

பவனேஷ் மனைவி சவிதா(48), சவிதாவின் மகள் மீனு(23), நிதி(25), துருவ்(15). லலித் பாட்டியாவின் மனைவி டினா(42). இவரின் 15வயது மகன் சிவம். பிரதிபாவின் மகள் பிரியங்கா (33). இவர்களுக்குக் கடந்த ஆண்டுதான் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது

இதில் பிரதிபாவின் மகள் பிரியங்காவுக்கு (33) கடந்த மாதம் தான் திருமணம் நிச்சயமாகியுள்ளது. இவர் ஒரு ஐ.டி. ஊழியர்,  நிச்சயத்தை தொடர்ந்து மிகவும் மகிழ்ச்சியாக அவர் இருந்ததாகவும், தற்கொலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் உறவினர்கள் சிலர் கூறுகின்றனர்.  

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.