பேருந்தில் பயணித்த கோழிக்கும் டிக்கெட் வசூலித்த நடத்துனர்

  ஐஸ்வர்யா   | Last Modified : 03 Jul, 2018 01:50 am

farmer-s-2-hens-get-half-ticket-each-in-bus-ksrtc-says

கர்நாடகாவில் விவசாயி ஒருவர் கோழியுடன் பேருந்தில் பயணம் செய்ததையடுத்து கோழிக்கும் சேர்த்து கட்டணம் வசூலித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.  

கர்நாடக மாநிலம் சிக்கபல்லபுரா மாவட்டத்தில் உள்ள கவுரிபதனூரில் இருந்து பெத்தனஹல்லி என்ற இடத்திற்கு விவசாயி ஸ்ரீநிவாஸ் இரண்டு கோழிகளுடன் நேற்று பயணம் செய்துள்ளார். நடத்துடனரிடம் ரூ.50 கொடுத்து டிக்கெட் கேட்டுள்ளார். ஆனால் நடத்துனர் ஸ்ரீநிவாஸுக்கு ரூ. 24க்கு முழு டிக்கெட் ஒன்றும், இரண்டு கோழிக்கும் தலா ரூ.12 க்கு அரை டிக்கெட்டும் கொடுத்து, மீது 2 ரூபாயை அவரிடம் திருப்பி கொடுத்துள்ளார். அதிர்ச்சி அடைந்த ஸ்ரீநிவாஸ் எதற்காக என் ஒரு ஆளுக்கு 3 டிக்கெட் என கேட்டுள்ளார். உடனே கோழியோ குழந்தையோ 6 முதல் 12 வயது வரை உள்ளவர்களுக்கு அரை டிக்கெட் வசூலிக்க வேண்டியது டிக்கெட் கட்டண விதி, அதன்படியே வசூலிக்கப்பட்டதாக நடத்துனர் விளக்கமளித்தார். 

இதுகுறித்து விவசாயி ஸ்ரீநிவாஸ் கூறுகையில், “வேறு வழியின்றி கோழிகளுக்கு எடுக்கப்பட்ட டிக்கெட்டுடன் நான் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று அடைந்தேன். இரண்டு கோழியின் இடையே 2.5 கிலோ தான் அதற்கு ரூ.24 வசூலிக்கப்பட்டுள்ளது. அரசு பேருந்தை நம்பிதான் பல விவசாயிகள் உள்ளனர். ஆனால் கோழிக்கு சேர்த்து டிக்கெட் வசூலித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” என கூறினார். 

Advertisement:
[X] Close