• கர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு
  • வாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி!
  • வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்

வைர தொழிலதிபர் நிரவ் மோடிக்கு ரெட் கார்னர் நோட்டீஸ்!

  Newstm News Desk   | Last Modified : 03 Jul, 2018 02:04 am

interpol-issues-red-corner-notice-against-nirav-modi

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,500 கோடி ரூபாய் அளவில் கடன் மோசடி செய்து நாட்டை விட்டு தப்பிய வைர தொழிலதிபர் நிரவ் மோடிக்கு இன்டர்போல் அதிகாரிகள் ரெட் கார்னர் நோட்டீஸ் விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

பஞ்சாப் நேஷனல் வங்கியில் உள்ள சில அதிகாரிகளின் உதவியோடு, சுமார் 13,500 கோடி ரூபாய் அளவில் வெளிநாட்டு வங்கிகளிடம் கடன் பெற்று மோசடி செய்தார் நிரவ் மோடி. இந்த விவகாரம் குறித்து சிபிஐக்கு புகார் அளிக்கப்படுவதன் முன், நிரவ் மோடி, தனது உறவினர்களோடு வெளிநாடு தப்பித்தார். 

அவர் மீது வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்ய சிபிஐ நடவடிக்கை எடுத்து வந்தது. இதற்காக, கடந்த மாதம் இன்டர்போல் அதிகாரிகளை அணுகி,  நிரவ் மோடியின் மீது ரெட் கார்னர் நோட்டீஸ் விடுக்க கோரிக்கை வைத்தனர். பின்னர், அவரது சகோதரர் நிஷால் மோடி மற்றும் நிரவ் மோடி நிறுவனத்தின் மூத்த அதிகாரி சுபாஷ் பரப் ஆகியோர் மீதும் ரெட் கார்னர் நோட்டீஸ் விடுக்க கோரிக்கை வைக்கப்பட்டது. சிபிஐ-யின் முயற்சிகளை தொடர்ந்து, இன்டர்போல், நிரவ் மோடியின் மீது ரெட் கார்னர் நோட்டீஸ் விடுத்துள்ளது. 

இதைத் தொடர்ந்து, இன்டர்போலில் உள்ள 192 நாடுகளில் எங்கு நிரவ் மோடி இருந்தாலும் அவரை, போலீசார் கைது செய்ய முடியும். 

Advertisement:
[X] Close