மெஹ்பூபா முஃப்திக்கு எதிராக கிளம்பும் அலை; உடைகிறதா பி.டி.பி?

  SRK   | Last Modified : 03 Jul, 2018 10:43 am

3-mlas-rise-against-mehbooba-mufti-more-could-follow

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முஃப்திக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்து வரும் 3 எம்.எல்.ஏ.க்கள் உட்பட பலர் பி.டி.பி கட்சியில் இருந்து விலக உள்ளதாக கூறப்படுகிறது. 

பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவோடு ஜம்மு காஷ்மீர் முதல்வராக செயல்பட்டு வந்தார் பி.டி.பி கட்சியின் தலைவர் மெஹ்பூபா முஃப்தி. சமீபத்தில், அவரது அரசு,  காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு எதிராக போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என குற்றம் சாட்டி, தனது ஆதரவை வாபஸ் பெற்றது பாரதிய ஜனதா. 89 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட காஷ்மீர் சட்டசபையில், பாரதிய ஜனதாவுக்கு 25 இடங்களும், பி.டி.பி-க்கு 28 இடங்களும் உள்ளன.

இந்நிலையில், மெஹ்பூபா முஃப்தி போதிய நடவடிக்கைகளை எடுக்காததால் தான் கூட்டணியில் முறிவு ஏற்பட்டதாக பி.டி.பி கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் இமாம் அன்சாரி விமர்சித்தார். "பி.டி.பி கட்சியையும், அவரது தந்தை, முன்னாள் பி.டி.பி தலைவர் முஃப்தி முகம்மது சயீத்தின் கனவையும் மெஹ்பூபா தகர்த்து விட்டார். பி.டி.பி கட்சி, இப்போது அவரின் சகோதரர்கள், உறவினர்கள் என குடும்ப மயமாக்கப்பட்டுள்ளது" என்றார் அன்சாரி. 

அவர் முஃப்தியை விமர்சித்தவுடன், மற்றொரு பி.டி.பி எம்.எல்.ஏ அப்பாஸ் வானியும், இமாம் அன்சாரியின் உறவினரும் மற்றொரு பி.டி.பி எம்.எல்.ஏ-வுமான அபிட் அன்சாரியும் மெஹ்பூபாவை விமர்சித்தனர். 

இவர்கள் மூவரும், மேலும் பல எம்.எல்.ஏ.க்களுடன் சேர்ந்து கட்சியை விட்டு விலகலாம் என கூறப்படுகிறது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close