மோடியின் ஃபிட்னஸ் வீடியோவுக்கு பணம் செலவாகவில்லை: மத்திய அமைச்சர் விளக்கம்

  Newstm Desk   | Last Modified : 03 Jul, 2018 11:13 am
rajyavardhan-rathore-slams-shashi-tharoor-over-false-statement

மோடியின் ஃபிட்னஸ் சேலஞ்ச் வீடியோவை உருவாக்க ரூ. 35 லட்சம் செலவானதாக வந்த தகவல் பொய்யானது என்று மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மத்திய விளையாட்டு துறை அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர். அதன் பின் பல பிரபலங்கள் தாங்கள் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை இணையத்தில் பதிவிட்டு வந்தனர். 

இதே போல இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி தனது உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்டு அத்துடன் பிரதமர் மோடியை இதே போன்ற வீடியோ வெளியிட சவால் விடுத்தார். 

இதனையடுத்து கோலியின் சவாலை ஏற்று பிரதமர் மோடி தான் காலையில் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோவை வெளியிட்டார். 

இந்நிலையில் இந்த வீடியோ எடுக்க ரூ. 35 லட்சம் வரை செலவாகி உள்ளதாக செய்திகள் வெளியாகின. மேலும் யோகா தின விளம்பரங்களுக்காக ரூ. 20கோடி வரை செலவாகி இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சஷித்தரூர் பகிர்ந்திருந்தார். மேலும் மோடியின் அரசு தொடர்ந்து விளம்பரங்களுக்கு தான் முக்கியத்துவம் அளிக்கிறது என்று குற்றம்சாட்டி இருந்தார். 

இந்நிலையில் இது பொய்யான தகவல் என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "சஷி தரூர் பொய்யான தகவலை பரப்புவதில் எனக்கு ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. மோடியின் ஃபிட்னஸ் வீடியோவுக்கு பணம் செலவாகவில்லை. அதனை அவரது வீடியோகிராஃபர்கள் தான் ஒளிப்பதிவு செய்தனர்" என்று விளக்கி உள்ளார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close