மன்மோகன் சிங் இந்திய பொருளாதாரத்தை மோசமாக்கிவிட்டார்: பிரதமர் மோடி

  Newstm Desk   | Last Modified : 03 Jul, 2018 01:32 pm

manmohan-killed-economy-modi

பொருளாதார நிபுணரான முன்னாள் பிரதமரும், எல்லாம் தெரிந்த முன்னாள் நிதி அமைச்சரும் இந்திய பொருளாதாரத்தை மோசமாக்கி விட்டதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டி உள்ளார். 

இந்தி வார இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த மோடி இந்திய பொருளாதாரம் பா.ஜ.க ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மிக மோசமாக இருந்ததாக கூறினார். மேலும், "நாம் ஆட்சியில் இல்லாத போது பொருளாதாரம் வேகமாக வீழ்ச்சி அடைகிறது என்பதை மட்டுமே அறிவோம் ஆனால் அது குறித்து மற்ற தகவல்கள் நம்மிடம் இல்லை. பின் பா.ஜ.க ஆட்சி அமைத்த போது முன்னாள் அரசு எந்த அளவுக்கு பொருளாதாரத்தை சீர்குலைத்து வைத்திருந்தனர் என்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். பட்ஜட்டில் கூட பல குழப்பங்கள் இருந்தன. 

2014ம் ஆண்டு பல நிறுவனங்கள் இந்தியாவை விட்டு வெளியேறிக்கொண்டு இருந்தனர். இதை வைத்து நாங்கள் அரசியல் செய்யவில்லை. அதையும் மீறி நாங்கள் அந்த தேர்தலில் பெரியளவில் வெற்றிப்பெற்றோம். இதே போல பொதுத்துறை வங்கிகள் கடன் வழங்குவதில் கூட அப்போதைய காங்கிரஸ் அரசு தலையிட்டு இருக்கிறது. உதாரணத்திற்கு முன்னார் ரூ. 500 கோடி கடன் வாங்கியவருக்கு டெல்லியில் இருந்து வரும் சிபாரிசு மூலம் மீண்டும் ரூ. 500 கோடி கொடுக்கப்பட்டு வந்தது. அந்த பணத்தை வைத்து முன்பு வாங்கிய கடனை அடைத்து வந்தனர். இதனால் வங்கிகள் பெரியளவில் நஷ்டத்தை சந்தித்தன. அதையும சரி செய்துள்ளோம்" என்றார். 
 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close