'லிவிங் டுகெதர்' ஜோடிகளுக்கும் திருமண சட்டம்?? உச்ச நீதிமன்றம் கேள்வி

  SRK   | Last Modified : 03 Jul, 2018 11:23 am
marriage-laws-for-living-together-couples-supreme-court-asks-center

நீண்ட காலமாக, கணவன் மனைவி போல வாழ்ந்து வருபவர்களை, சட்டப்படி, திருமணம் ஆனவர்கள் போல பார்ப்பதா, என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

வெளிநாடுகளில் பரவலாக இருந்து வரும் 'லிவிங் டுகெதர்' கலாச்சாரம் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. திருமணத்தில் ஆர்வம் இல்லாத பலர், தங்களுக்கு பிடித்தவர்களோடு கணவன் -மனைவி போலவே வாழ்ந்து வருகிறார்கள். பொதுவாகவே இரண்டு தரப்பிரும், சம்மதத்தோடே இதுபோன்ற உறவுகளில் இறங்குகின்றனர். ஆனால் பலர், திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதிகள் அளித்து பெண்களை ஏமாற்றுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட ஒரு வழக்கில், 6 வருடங்களாக ஒரு பெண்ணுடன் வாழ்ந்து வந்த நபர், அவரை திருமணம் செய்துகொள்ள முடியாது என கூறிவிட்டாராம். இதனால், அந்த பெண்ணின் தாயார், அந்த நபர் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுபோன்ற நீண்டகால உறவுகளை, சட்டப்படி திருமணம் போலவே பார்ப்பதா? என மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது. இதுபோன்ற வழக்குகளில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பொருட்டு, அவர்களுக்கு ஆண்கள் இழப்பீடு வழங்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும் என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. நீதிபதிகள் ஆதர்ஷ் கோயல் மற்றும் அப்துல் நசீர் கொண்ட பெஞ்ச், அட்டர்னி ஜெனரலிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டுள்ளது. 

இந்த விவகாரத்தில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்க்வியை நீதிமன்ற ஆலோசகராகவும் நியமித்துள்ளனர். பெண்கள் பாதுகாப்பு, உதவித்தொகை, சொத்துரிமை, குழந்தைகள் மீதான உரிமை போன்ற பல்வேறு விஷயங்களில், லிவிங் டுகெதர் ஜோடிகள் தொடர்பாக சரியான வழிகாட்டுதல் இல்லேயென நீதிமன்றம் கூறியுள்ளது. அப்படி, இதுபோன்ற உறவுகளுக்கு திருமண சட்டம் செல்லுமென்றால், குறைந்தபட்சம் எவ்வளவு காலம் அவர்கள் ஒன்றாக வாழ்ந்திருக்க வேண்டும் என்பது போன்ற விவரங்களை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். ஜூலை 12ம் தேதி இதற்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close