ப.சிதம்பரத்தை கைது செய்ய ஆகஸ்ட் 1 வரை இடைக்காலத் தடை!

  Newstm Desk   | Last Modified : 11 Oct, 2018 11:29 am
inx-media-case-delhi-hc-extends-interim-protection-from-arrest-to-p-chidambaram-till-august-1

ஐ.என்.எக்ஸ் மீடியா மோசடி வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடையை ஆகஸ்ட் 1ம் தேதி வரை நீட்டித்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு விதிமுறைகளை மீறி, அந்நிய முதலீடு மேம்பாட்டு வாரியம் அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்தது. இது தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. மேலும், கார்த்தி சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

தொடர்ந்து சிதம்பரத்தை விசாரணை செய்ய சிபிஐ சம்மன் அனுப்பியது. மே 31ம் தேதி அல்லது அதற்கு முன்னதாக ஆஜராக வேண்டும் என கூறியிருந்த நிலையில், விசாரணையின் போது கைது செய்யப்படலாம் என ப.சிதம்பரம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு அளித்தார். இந்த மனுவின் மீது கடந்த மே 31ம் தேதி நடைபெற்ற விசாரணையில், ஜூலை 3ம் தேதி வரை ப.சிதம்பரத்தை கைது செய்ய நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்தது.

இதனையடுத்து சிபிஐ சம்மன் அனுப்பியதற்கு ஏற்ப சிதம்பரம் தொடர்ந்து ஆஜராகி விளக்கமளித்து வந்தார். இன்றுடன் கால அவகாசம் முடிவடையும் நிலையில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் வழக்கின் விசாரணை நடைபெற்றது. ப.சிதம்பரத்தின் கோரிக்கைக்கு ஏற்ப, அவரை கைது செய்வதற்கான தடையை ஆகஸ்ட் 1ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

சிபிஐ விசாரணைக்கு ப.சிதம்பரம் தொடர்ந்து ஆஜராகி விளக்கமளித்து வருவதுடன், அவர்களது விசாரணைக்கு நல்ல ஒத்துழைப்பு  தருகிறார். எனவே தற்போதைய சூழ்நிலையில், அவரை சிபிஐ கைது செய்வதற்கான வாய்ப்புகள் குறைவு தான் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Loading...
Advertisement:
[X] Close