மாநில அரசு இடைக்கால டி.ஜி.பி நியமிக்க தடை: உயர்நீதிமன்றம் 

  Newstm Desk   | Last Modified : 03 Jul, 2018 01:18 pm

sc-barred-appointment-of-acting-dgp

மாநில அரசுகள் இடைக்கால டிஜிபிகளை நியமிப்பதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

மாநிலங்களில் டிஜிபிக்களை நியமிப்பதை எதிர்த்து பிரகாஷ் சிங் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. அதில், "டிஜிபியின் பதவிக்காலம் முடிவதற்கு 3 மாதங்களுக்கு முன்பு மாநில அரசு தங்களது பரிந்துரையை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு(யுபிஎஸ்சி) அனுப்பவேண்டும். இதனையடுத்து யுபிஎஸ்சி அமைக்கும் குழு, அந்த பரிந்துரையில் இருந்து யாரை நியமிக்கலாம் என்பதை தேர்வு செய்து அந்த பட்டியலை மாநில அரசுக்கு அனுப்பி வைக்கும். அதன்படி மாநில அரசு டிஜிபிகளை நியமிக்க வேண்டும்" என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், 3 மாதங்களில் இந்த பணிகள் முடிந்து அடுத்த டிஜிபி யார் என்பது தெரியவந்துவிடும் என்பதால் இனி இடைக்கால டிஜிபியை நியமிக்க மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. 

முன்னதாக இந்த வழக்கில் மத்திய அரசு சார்பாக வாதாடிய வழக்கறிஞர், மாநில அரசுகள் தங்களுக்கு சாதகமான, அரசியல் ரீதியாக ஒத்துபோகக்கூடிய அதிகாரிகளை டிஜிபிகளாக நியமிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close