• கர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு
  • வாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி!
  • வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்

மனைவி மரண வழக்கில் சஷி தரூர் முன் ஜாமீக் கேட்டு மனு

  Newstm Desk   | Last Modified : 03 Jul, 2018 05:28 pm

shashi-tharoor-applies-anticipatory-bail-in-sunandha-pushkar-case

சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் முன் ஜாமீன் கேட்டு அவரது கணவரும், காங்கிரஸ் கட்சி தலைவருமான சஷி தரூர் மனுத்தாக்கல் செய்துள்ளார். 

முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சஷி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர், கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் 17ம் தேதி டெல்லியில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்தபோது மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த மரணம் தொடர்பாக பெரும் சர்ச்சைகள் எழுந்தன.

இதையடுத்து, அவரது வயிற்றுப்பகுதியின் உள்ளுறுப்புகள் தடயவியல் பரிசோதனைக்காக அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டன. அமெரிக்க புலனாய்வு நிறுவனத்துக்கு சொந்தமான நவீன ஆய்வகத்தில் அவை பரிசோதிக்கப்பட்டன. அந்த பரிசோதனையின் அறிக்கை டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அமெரிக்க புலனாய்வு நிறுவனம் ஒப்படைத்த அறிக்கையின் அடிப்படையில் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவ வல்லுனர்கள் ஆய்வு செய்து வந்தனர். அந்த அறிக்கையின் மீதான கருத்துகளை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வல்லுனர்கள் கடந்த 2016ம் ஆண்டு வெளியிட்டனர்.

சுனந்தா புஷ்கரின் மரணத்துக்கு விஷம்தான் காரணம் என உறுதிபட தெரியவந்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர். இவ்வழக்கில் சசி தரூர் மீது போலிசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர் வரும் 7ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சஷி தரூருக்கு டெல்லி பெருநகர தலைமை நீதிபதி சம்மன் அனுப்பியிருந்தார். 

இந்நிலையில், சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் முன் ஜாமீன் கோரி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் இன்று சஷி தரூர் மனு தாக்கல் செய்துள்ளார். அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை (4ம் தேதி) நடக்கும் என்று தெரிகிறது. 

Advertisement:
[X] Close