கைலாஷ் மானசரோவர் புனிதப் பயணத்தில் தமிழர் மரணம்!

  Newstm Desk   | Last Modified : 06 Aug, 2018 11:37 am

tamilian-dead-while-kailash-mansarovar-yatra

கைலாஷ் மானசரோவர் புனிதப் பயணம் சென்று திரும்பிய தமிழர் ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். 

திபெத்தில் உள்ள கைலாஷ் மானசரோவருக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை செல்வது வழக்கம். தென் மாநிலங்களான தமிழகம், கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்வதுண்டு. கடந்த 11ம் தேதி தொடங்கியுள்ள இந்த யாத்திரைக்கு தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சுமார் 1,500க்கும் மேற்பட்டோர் சென்றுள்ளனர்.  யாத்திரை முடிந்து திரும்பி வந்த சமயத்தில், நேபாளத்தில் கனமழை பெய்ததில் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டது.  விமான சேவையும் முழுவதுமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நேபாளத்தின் சிமிகோட் பகுதியில் யாத்ரீகர்கள் சிக்கித் தவிப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு வெளியுறவுத்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கைலாஷ் மானசரோவர் புனிதப் பயணம் மேற்கொண்ட தமிழர் ஒருவர் மரணம் அடைந்துள்ளார். அவர் ஆண்டிப்பட்டியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் ராமச்சந்திரன் ஆவார். இதனால் காத்மண்டுவில் உள்ள ராமச்சந்திரனின் உடலை தமிழகம் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முன்னதாக, கர்நாடகா மற்றும் கேரளாவைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்திய அரசின் கோரிக்கைக்கு ஏற்ப காத்மண்டு நகரில் இருக்கும் இந்தியப் பயணிகளை வர்த்தக விமானம் மூலம் மீட்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சிமிகோட் பகுதியில் சிக்கியவர்களை விரைந்து மீட்க வேண்டும் என பிரதமர் மோடியும் உத்தரவிட்டுள்ளார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close