அசரவைத்த அம்பானி வீட்டு நிச்சயதார்த்தம்: என்னதான் ஸ்பெஷல்?

  Newstm Desk   | Last Modified : 05 Jul, 2018 05:13 pm
what-special-about-mukesh-ambani-s-son-akash-s-engagement

கல்யாணம் என்று சொன்னவுடன் கல்யாணப் பெண்ணை விட பலருக்கும் சட்டென நினைவுக்கு வரும் விஷயம் பொன்னும் பட்டாடைகளுமே. அதுவும் அம்பானி வீட்டு கல்யாணம் என்றால், அது ஒரு படி மேலே வேற லெவல் தான் என்றே சொல்ல வேண்டும்.

 

ஜூன் 30 அன்று பிசினஸ் ஜாம்பவான் முகேஷ் அம்பானி - நீத்து அம்பானியின் மும்பை வீட்டில், இவர்களது மூத்த மகன் ஆகாஷ் அம்பானியின் திருமண நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடைப்பெற்றது.

இரு மாதங்கள் முன்பு தனது பள்ளித் தோழி ஷ்லோகா மெஹ்தாவுடன் ஏற்பட்ட காதலை அறிவித்தார் ஆகாஷ் அம்பானி. அதற்குப் பிறகு இரு வீட்டாரும் திருமண ஏற்பாடுகளில் இறங்க, முதல் நிகழ்ச்சியாக நிச்சயதார்த்த நிகழ்ச்சியே மெஹந்தி, சங்கீத், நிச்சயம் என்று மூன்று நாள் கொண்டாட்டமாக நடந்தேறியது.

அது திருமண நிச்சயதார்த்த விழாவா அல்லது ஏதாவது பாலிவுட் நட்சத்திர விழாவா என்று சந்தேகப்படும் அளவிற்கு அத்தனை பாலிவுட் நட்சத்திரங்களும் பளப்பள பட்டாடைகளில் காட்சி தந்தனர். நிகழ்ச்சிக்கு வந்து சிறப்பித்த அவர்களின் ஃபோட்டோஸ் ரசிகர்கள் கண்களுக்கு விருந்து என்றே சொல்ல வேண்டும். 

பாலிவுட் உலகம் மட்டுமல்லாமல் நட்சத்திர கிரிக்கெட்டர்ஸ் சச்சின், ஹர்பஜன் மற்றும் சாஹீர் கான் போன்றோர் தன் குடும்பத்தோடு கலந்து கொண்டனர். பிசினஸ் புயல் வீட்டு நிகழ்ச்சிக்கு நமது இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானும் ஆஜர்.

அபிஷேக்கும் ஐஸ்வர்யாவும்  தனது மகளுடன் இந்த நிகழ்ச்சியில் கிளிக்கிட்ட பிக்ச்சர் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த ஜோடியின் மகள் ஆராத்யாவுக்கு நீத்து அம்பானி விசேஷ அழைப்பு விடுத்ததாக தெரிகிறது.

மகனின் நிச்சயதார்த்த விழாவில் அம்மா நீத்து அம்பானி ஆடிய கிளாசிக்கல் ஸ்டைல் நடனம் எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தியது.  சச்சின், ஷாருக்கானுடன் இணைந்து இந்த நிகழ்ச்சியில் எடுத்த செலஃபீ இன்ஸ்டாகிராமில் லட்ச லட்சமாக லைக்குகளை அள்ளுகிறது.

இப்பேர்பட்ட கோலாகல நிகழ்ச்சிக்கு முன்னர் தங்கக் கற்கள் மற்றும் பிள்ளையார் சிலையால் அலங்கரிக்கப்பட்ட ஒரு லட்ச ருபாய் மதிப்புள்ள நிச்சயதார்த்த விழா அழைப்பிதழ் வாட்சப்பில் வைரலாக பரவி எல்லோரையும் வாய்ப் பிளக்க வைத்தது. 

நிச்சயதார்த்த விழா அழைப்பிதழுக்கே ஒரு லட்சம் என்றால் திருமண அழைப்பிதழ் எப்படி இருக்கும் என்று இப்போதே மக்கள் கணக்கு போட ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் அம்பானிகளோ இன்னும் திருமண தேதி கூட முடிவு செய்யவில்லை.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

Showing 1 of 14

Advertisement:
[X] Close