டெல்லியில் ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது: உச்சநீதிமன்றம் அதிரடி!

  Newstm Desk   | Last Modified : 04 Jul, 2018 11:47 am
sc-verdict-on-who-administers-delhi

டெல்லியில் துணை நிலை ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது, அமைச்சரவையின் முடிவுகளை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும் என தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்துள்ளார். 

டெல்லியில் துணை நிலை ஆளுநருக்கு தான் அதிகமாக அதிகாரம் உள்ளது என டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த 2016 ஆகஸ்ட் 6ம் தேதி தீர்ப்பளித்தது. டெல்லியில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி கட்சி இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது. விசாரணை முடிவில் நீதிபதிகள் தங்களது தீர்ப்புகளை வாசித்தனர்.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் தீர்ப்பின்படி, டெல்லி என்பது மற்ற மாநிலங்களை போல் இல்லை. துணை நிலை ஆளுநர் அதிகாரத்தை கண்மூடித்தனமாக பயன்படுத்தக்கூடாது. அமைச்சரவை முடிவுகள் மீது ஏதேனும் கருத்து வேறுபாடு இருந்தால் பேசித் தீர்த்துக்கொள்ளலாம். 

►துணை நிலை ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட முடியாது. அமைச்சரைவையின்  முடிவுகளுக்கு கட்டுப்பட்டு தான் ஆக வேண்டும். அதே நேரத்தில் ஆளுநரும், அரசும் இணைந்து செயல்பட வேண்டும்.

►ஆளுநர் அனைத்து முடிவுகளையும் குடியரசுத்தலைவருக்கு பரிந்துரைக்க தேவையில்லை. சொந்தமாக யோசித்ததும் முடிவெடுத்து அதன்படி செயல்படலாம்.

►மாநில அரசும் ஆளுநரும் கூட்டாட்சி தத்துவ அடிப்படையில் செயல்பட வேண்டும். மக்களின் திட்டங்கள் குறித்து முடிவு எடுக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. அதேபோன்று நிலம் ஒதுக்கீடு குறித்து ஆளுநர் முடிவெடுக்கலாம்.

►மக்களின் நலன் கருதி அரசின் திட்டங்களை ஆளுநர் ஏற்றுக்கொள்ள வேண்டும். மக்களுக்கான திட்டங்கள் தாமதாமானால் அதற்கு ஆளுநரும், அரசும் தான் பொறுப்பு. எனவே மக்கள் நலனை கருதி இரு தரப்பினரும் ஒன்றாக செயல்பட வேண்டும்" என தீர்ப்பளித்துள்ளார். 

இந்த வழக்கில் மற்ற நீதிபதிகளும் தங்களது தீர்ப்பை வாசித்தனர்.

நீதிபதி சந்திரசூட் தீர்ப்பின்படி, "டெல்லி அரசுப்பிரதிநிதிகள் மக்களால் தேர்தெடுக்கப்பட்டவர்கள். எனவே அமைச்சரவையின் முடிவுகளில் ஆளுநர் தலையிட முடியாது. ஆளுநரை விட அரசுக்கு அதிகாரமும், பொறுப்பும் அதிகமாக உள்ளது.  உண்மையான அதிகாரமும், கணிசமான பொறுப்புகளும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடமே அளிக்கப்படுகின்றன. எனவே அரசின் செயல்பாடுகளுக்கு ஆளுநர் முட்டுக்கட்டை போட இயலாது. அரசின் முடிவுகளுக்கு ஆளுநர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என்றார். 

இறுதியில் தலைமை நீதிபதி உள்பட 5 நீதிபதிகளில் 3 நீதிபதிகள் 'டெல்லி அரசுக்கே அதிகாரம்' என்று தீர்ப்பளிக்க மற்ற இரு நீதிபதிகள் ஆளுநருக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளனர். இதில் பெரும்பான்மையாக 3 நீதிபதிகள் டெல்லி அரசுக்கு ஆதரவாக கூறியுள்ள தீர்ப்பே இறுதி தீர்ப்பாக எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், டெல்லிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என ஆம் ஆத்மி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து தீர்ப்பளித்த நீதிபதிகள், "டெல்லிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க முடியாது" என்றனர். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close