வதந்திகளால் தொடரும் வன்முறைகள்: வாட்ஸ்ஆப்புக்கு மத்திய அரசு எச்சரிக்கை

  Newstm Desk   | Last Modified : 04 Jul, 2018 01:08 pm
centre-urges-whatsapp-to-take-control-over-fake-news

வாட்ஸ்ஆப்பில் வதந்திகள் பரவுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்நிறுவனத்திற்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமூக வலைதளங்களில் முக்கியமான ஒன்றாக விளங்கும் ஃபேஸ்புக் தற்போது தகவல் திருட்டு பிரச்னையில் சிக்கி உள்ளது. இந்த விவகாரமே இன்னும் தீராமல் இருக்கும் நிலையில் தற்போது வாட்ஸ்ஆப் மூலம் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு அடுத்த பிரச்னை வந்துள்ளது. 

சமீபகாலமாக வாட்ஸ்ஆப்களில் பரவும் வதந்திகளால் நாட்டில் பல இடங்கிளல் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் 15க்கும் மேற்பட்டோர் நாடு முழுவதும் தாக்கப்பட்டுள்ளது. அவர்களுள் 5 பேரின் உயிர் பறிப்போன சம்பவங்களும் நடந்துள்ளது.

இந்நிலையில், வதந்தி சார்ந்த வன்முறைகள் பரவுவதை தடுக்க வேண்டும் என வாட்ஸ்ஆப் நிறுவனத்தை மத்திய அரசு எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வாட்ஸ்ஆப் செயலியில் பரப்பப்படும் பொறுப்பற்ற, உணர்வுகளை தூண்டிவிடக் கூடிய, ஆத்திரமூட்டும், வதந்தியான தகவல்களால் சமீபகாலமாக அசாம், மகாராஷ்டிரா, கர்நாடகா, திரிபுரா மற்றும் மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற படுகொலை சம்பவங்கள் வேதனைக்கும் வருத்தத்துக்கும் உரியதாக உள்ளன.

நல்ல நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட செயலிகளை சில சமூக விரோதிகள் தவறாக பயன்படுத்தி வன்முறைக்கு வித்திட்டு வருகின்றனர். இதில் தங்களுக்கான பொறுப்பை இந்த செயலி நிறுவனம் தட்டிக் கழித்துவிட முடியாது. இதைப்போன்ற தகவல்கள் பரவுவதை உரிய சாதனங்களின் மூலம் உடனடியாக தடுத்தாக வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு விளக்கம் அளித்துள்ள வாட்ஸ்ஆப், வதந்திகளை தடுக்க முடிந்த வரை நடவடிக்கை எடுத்து வருவதாகவும், தவறான செய்திகளை தடுப்பது சவாலான ஒன்று என்றும் தெரிவித்துள்ளது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close