ஜனநாயகம் வென்றது: உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து கெஜ்ரிவால்

  Newstm Desk   | Last Modified : 04 Jul, 2018 12:33 pm
arvind-kejriwal-tweet-after-sc-verdict

டெல்லியில் யாருக்கு அதிகாரம் என்பது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் ஜனநாயகம் வென்றுள்ளதாக அர்விந்த் கெஜ்ரிவால் ட்வீட் செய்துள்ளார். 

டெல்லியில் துணை நிலை ஆளுநருக்கு தான் அதிகமான அதிகாரம் உள்ளது என டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 5 நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பில் ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது, அமைச்சரவையின் முடிவுகளை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இதுகறித்து அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "டெல்லி மக்களின் பெரிய வெற்றி, ஜனநாயகம் வென்றுள்ளது" என பதிவிட்டுள்ளார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close