நெல்லுக்கு ஆதார விலை உயர்வு! விவசாயிகள் மகிழ்ச்சி!

  Newstm Desk   | Last Modified : 04 Jul, 2018 02:56 pm
union-cabinet-meet-approves-increase-in-msp

நெல், சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கான ஆதார விலையை உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு  வெளியிட்டுள்ளது. 

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் நெல் உள்ளிட்ட பயிர்களுக்கான விலையை உயர்த்துவது என முடிவெடுக்கப்பட்டது. 

அதன்படி, நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ. 200 உயர்த்தி ரூ.1750க்கும், முதல்தர நெல்லுக்கான விலை  குவிண்டாலுக்கு ரூ. 220 உயர்த்தி ரூ.1770க்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக இதுவரை இல்லாத அளவுக்கு இரண்டு மடங்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோன்று சோளத்துக்கான ஆதார விலை ரூ. 275 உயர்த்தப்பட்டு ரூ.1700க்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

துவரம் பருப்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.225 உயர்த்தப்பட்டுள்ளது. மற்ற பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் விவசாயிகள்  மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். அதே நேரத்தில் அரசுக்கு ரூ.15 ஆயிரம் கோடி செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாக்கப்படும் என பா.ஜ.க அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close