அரபு நாடுகளுக்கு வேலைக்காக செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை குறைந்தது

  Newstm Desk   | Last Modified : 04 Jul, 2018 08:16 pm
since-2015-inidan-workers-in-gulf-down-by-half

வேலைக்காக அரபு நாடுகளுக்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை 2015ம் ஆண்டில் இருந்து பாதியாக குறைந்துள்ளது. 

இந்தியர்கள் வேலைக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் போது பெரும்பாலும் அரபு நாடுகளே அவர்கள் தேர்வாக இருந்து வருகிறது. ஆனால் கடந்த 2015ம் ஆண்டு முதல் அரபு நாடுகளுக்கு செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

மொத்தமா 2015ம் ஆண்டு அரபு நாட்டுக்கு சென்றவர்களின் எண்ணிக்கை 7.6 லட்சமாக இருந்தது. அது இப்போது 3.7 லட்சமாக குறைந்துள்ளது. அந்த நாடுகளில் குடிமகன்களுக்கான வேலை வாய்ப்பை அதிகரிக்க அரசுகள் கொண்டு வந்த திட்டத்தினால் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. 

இந்த பட்டியலில் தற்போது துபாய் தான் இந்தியாவில் இருந்து செல்லும் ஊழியர்களின் முதல் தேர்வாக இருக்கிறது. கடந்த 2015ம் ஆண்டில் துபாய்க்கு சென்றவர்களை விட 2018ம் ஆண்டு சென்றவர்களின் எண்ணிக்கை 33 சதவீதமாக குறைந்துள்ளது. அதிகபட்சமாக சவுதி அரேபியாவுக்கு செல்வோரின் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளில் 74 சதவீதமாக குறைந்துள்ளது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close