இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுகிறார் இஸ்லாமிய பேச்சாளர் ஸாகீர் நாயக்!

  SRK   | Last Modified : 04 Jul, 2018 06:39 pm
zakir-naik-is-being-brought-to-india-by-flight

சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் ஸாகீர் நாயக், மலேசிய அதிகாரிகளால், இன்று இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுகிறார். 

கடந்த சில ஆண்டுகளாக பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வரும் இஸ்லாமிய போதகர் ஸாகீர் நாயக் மீது தீவிரவாதத்தை தூண்டியதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. கடந்த 2016ம் ஆண்டு, தாக்காவில் நடைபெற்ற ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தாக்குதலுக்கு இவரது பேச்சுக்கள் முக்கிய காரணமாக கருதப்படுகிறது. 

இந்நிலையில், 2016ல் அவர் மலேசியா தப்பிச் சென்றார். அவருக்கு மலேசிய அரசு நிரந்தர குடியுரிமை வழங்கியது. இது இந்திய தரப்பில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த கோரிக்கைகள் வைக்கப்பட்ட நிலையில், மலேசியாவில் தேர்தல் முடிந்து புதிய பிரதமர் பதவியேற்றார். புதிய அரசு, ஸாகீர் நாயக்கை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்து வந்தது. இந்நிலையில், ஸாகீர் நாயக் இன்று இந்தியாவுக்கு விமானம் மூலம் கொண்டு வரப்படுகிறார் என மலேசிய போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர். 

ஏன் இதற்கு முன் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கேட்டதற்கு,  இந்திய அரசிடம், அவர் பெயரில் இன்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்க ஏற்பாடு செய்ய கோரியதாகவும், அது வராததால் கைது செய்யவில்லை, என்றும் தெரிவித்துள்ளனர். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close