செல்ஃபி எடுத்தால் கைரேகை திருடப்படும்- அதிர்ச்சி ரிப்போர்ட்

  ஐஸ்வர்யா   | Last Modified : 04 Jul, 2018 06:37 pm
dont-take-selfie-with-victory-symbol-says-ips-rupa

விரல்களை கேமிரா முன்பு நீட்டி செல்ஃபி எடுத்தால் கைரேகை திருடப்படும் என அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.

இளைஞர்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லாத ஒரே விஷயம் செல்ஃபி மட்டும் தான். எங்கு சென்றாலும் விதவிதமாக செல்ஃபி எடுக்கும் வினோத பழக்கத்திற்கு வேட்டுவைக்கும் விதத்தில் வெளியாகியுள்ளது ஒரு எச்சரிக்கை செய்தி. அதாவது விரல்களை கேமிரா முன்பு நீட்டி செல்ஃபி எடுத்தால் கைரேகை திருடப்படுமாம். இது என்னடா செல்ஃபிக்கு வந்த சோதனை என நினைக்கலாம் ஆனால் இது வதந்தி இல்லை உண்மை தான் என்கிறார் ஐ.பி.எஸ் அதிகாரி ரூபா. 

இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், நாம் பொது இடங்களில் செல்ஃபி எடுத்து அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யும்போது நம்முடைய ரேகைகள் திருட வாய்ப்புள்ளது. அவ்வளவு பெரிய புகைப்படத்தில் கண்ணுக்கு தெரியாத ரேகையை எப்படி திருட முடியும் என நினைக்கலாம். ஆனால் நம் கைரேகையை ஜூம் செய்து ரேகையை நகல் எடுக்க முடியும். தவறு செய்துவிட்டு அந்த ரேகைகளை தடயங்களாய் விட்டுச்செல்லும் குற்றவாளிகளும் உள்ளனர். எனவே பொது இடங்களில் செல்ஃபி எடுப்பவர்களும், அதனை சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்களும் எச்சரிக்கையாக இருங்கள்” என தெரிவித்துள்ளார். 
 
ரூபாவின் மேற்கண்ட விளக்கங்கள் சரியோ, தவறோ ஆனால் இனி செல்ஃபி எடுக்கும்போது இந்த செய்தி கண்டிப்பாக நினைவுக்கு வரும். 


 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close