சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்படாது

  Newstm News Desk   | Last Modified : 05 Jul, 2018 03:54 am

elections-will-be-conducted-by-the-current-system-cec

தேர்தல்களால் ஏற்படும் செலவுகளை குறைக்க, ஒரே நேரத்தில் நாடு முழுவதும் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களை நடத்த மத்திய அரசு திட்டமிட்டிருந்த நிலையில், அது தற்போதைக்கு சாத்தியம் இல்லையென தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார். 

5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் தனித்தனியே இதுபோன்ற தேர்தல்கள் நடத்தப்படுவதால், அரசுக்கு செலவு அதிகரிக்கிறது என மத்திய அரசு கூறி வருகிறது. இதனால், நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும் போதே, சட்டமன்ற தேர்தல்களையும் நடத்த ஆலோசனை நடத்தி வந்தது. இந்த திட்டம் தொடர்பாக மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தவும் இந்திய சட்ட கமிஷன் திட்டமிட்டுள்ளது. 

இந்த புதிய தேர்தல் முறைக்கு பல மாநில அரசுகள் மற்றும் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 2019ம் ஆண்டு முதல் தேர்தல்களை இதுபோல நடத்த வாய்ப்புள்ளதாக மத்திய அரசு கூறி வந்த நிலையில், தற்போதுள்ள முறையே பின்பற்றப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசியபோது, "தேர்தல் ஆணையம் அரசியல் சாசனத்தின் படி, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை பின்பற்றி தேர்தல்களை நடத்த வேண்டும். அதனால், தற்போதுள்ள முறையையே பின்பற்றி தேர்தல்கள் நடத்தப்படும்" என்றார் ஓ.பி.ராவத். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close